கோடைகால ஆக்கி- கால்பந்து பயிற்சி முகாம்
கோவில்பட்டி பள்ளியில் கோடைகால ஆக்கி- கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ஹோலி ட்ரினிட்டி சி.பி.எஸ்.இ பள்ளியில் கோடைகால இலவச சிறப்பு ஆக்கி மற்றும் கால்பந்து பயிற்சி முகாம் கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. முகாமின் நிறைவு நாளன்று முகாமில் கலந்து கொண்ட வீரர்- வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவுக்கு பள்ளி தாளாளர் மோசஸ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஷகீலா ராணி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி கலந்துகொண்டு முகாமில் கலந்துகொண்ட 60-க்கும் மேற்பட்ட வீரர்கள்- வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். ஆக்கி பயிற்சியாளர்கள் சீனிவாசன், சுரேஷ்குமார், கால்பந்து பயிற்சியாளர்கள் மகேஷ், சுகி ரொனால்ட் ரீகன் ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பள்ளி உடற்கல்வி இயக்குனர் சீனிவாசன் நன்றி கூறினார்.