கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்
கடலூரில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்
கடலூர்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கமும் இணைந்து கோடைகால இலவச கிரிக்கெட் பயிற்சி முகாமை கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தியது. இதற்கு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வெங்கடேஷ், செயலாளர் கூத்தரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் ராகுல் வீரர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சி முகாமில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. இலவசமாக நடத்தப்படும் இந்த பயிற்சி முகாம் அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி வரை தினசரி காலை 5 மணி முதல் 8 வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் நடைபெறுகிறது.