கோடை விழா இன்று தொடக்கம்:போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை இயக்கக்கூடாது-வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தல்


கோடை விழா இன்று தொடக்கம்:போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை இயக்கக்கூடாது-வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 6 May 2023 12:45 AM IST (Updated: 6 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை இயக்கக்கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியதோடு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நீலகிரி

கோத்தகிரி

போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை இயக்கக்கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியதோடு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கோத்தகிரி போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்க உள்ள நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு வரத் தொடங்கி உள்ளனர். இங்குள்ள சுற்றுலாத் தலங்களை கண்டுகளித்து விட்டு, சமவெளிப் பகுதிகளுக்கு திரும்பிச் செல்லும் போது மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது. இது போன்ற விபத்துகளை தவிர்க்கும் வகையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை வழியாக செல்லும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர்கள் பிலிப் சார்லஸ், ராஜேந்திரன் மற்றும் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினா்.

போதைப் பொருட்கள்

வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும் போது கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்கக் கூடாது. போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை இயக்கினால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதனால் ஓட்டுனர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் தாழ்வான மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் போது 2-வது கியரில் பாதுகாப்பாக இயக்க வேண்டும். அது வேகத்தில் வாகனங்களை இயக்கக் கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினா். மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர், பயணம் செய்யும் போது ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவர் என இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும். ஹெல்மெட் அணிவதால் விபத்துகள் ஏற்பட்டாலும் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்படுகிறது. மேலும் அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என விளக்கிக் கூறி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினா்.


Next Story