கோடை கால இலவச சித்த மருத்துவ முகாம்


கோடை கால இலவச சித்த மருத்துவ முகாம்
x

கோடை கால இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் மக்களை தேடி தமிழ் மருத்துவமான கோடைகால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாமினை கலெக்டர் கற்பகம் நேற்று தொடங்கி வைத்தார். முகாமில் கோடை கால உணவுகள், கோடை கால நோய்களை தீர்க்கக் கூடிய மருந்துகள் மற்றும் நமது அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக்கூடிய இயற்கை பொருட்களின் நன்மைகள் குறித்தும், அதை எந்த நேரத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் கலெக்டர் கற்பகம் பொதுமக்களுக்கு இலவசமாக சித்த மருந்துகளையும், மூலிகை மரக்கன்றுகளையும், கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவத்திற்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தினையும் வழங்கினார். முகாமில் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, வயிற்றுப்புண், தோல் நோய்கள், கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, சிறுநீரக கற்கள், மாதவிடாய் கோளாறுகள், பொடுகு, சைனஸ், மூலம், ஆஸ்துமா, பவுத்திரம், வெள்ளைப்படுதல், தைராய்டு பிரச்சினை, கருப்பை-சினைப்பை கட்டிகள், குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உயர் தரமான சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது. எனவே, இதனை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர் அர்ஜூனன், இருக்கை மருத்துவ அலுவலர் சரவணன், உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் விஜயன், செந்தமிழ்ச்செல்வி, கற்பகம், கலைச்செல்வி, ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர் ராகுல்ஜி, இயற்கை யோகா மருத்துவ உதவி அலுவலர் கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story