கோடை நெல் சாகுபடி தீவிரம்
பூதலூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர்
திருக்காட்டுப்பள்ளி;
பூதலூர் வேளாண்மை வட்டார கிராமங்களில் காவிரி, குடமுருட்டி கரையோர ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தும் விவசாயிகள் பலர் கோடை நெல் நடவு பணிகளை முடித்து விட்டனர். கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்யும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீரை முழு அளவில் பயன்படுத்தி தற்போது கோடை நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. நெல் நடவு, நாற்று பறித்தல், வரப்புகளை சீரமைத்தல், டிராக்டர் கொண்டு உழவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Related Tags :
Next Story