கோடை கால சித்த மருத்துவ முகாம் தொடக்கம்


கோடை கால சித்த மருத்துவ முகாம் தொடக்கம்
x

கோடை கால சித்த மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (பழைய வளாகம்) இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் மக்களை தேடி தமிழ் மருத்துவமான கோடைகால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாமினை கலெக்டர் ரமணசரஸ்வதி நேற்று தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கினார். முகாமில் கலெக்டர் ரமணசரஸ்வதி பேசுகையில், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, வயிற்றுப்புண், தோல் நோய்கள், கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, சிறுநீரக கற்கள், மாதவிடாய் கோளாறுகள், பொடுகு, சைனஸ், மூலம், ஆஸ்துமா, பௌத்திரம், வெள்ளைப்படுதல், தைராய்டு பிரச்சினை, கருப்பை-சினைப்பை கட்டிகள், குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உயர் தரமான சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது. எனவே, இதனை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும், என்றார். முன்னதாக அவர் சித்த மருந்துகள் மற்றும் அன்றாடம் நாம் உணவில் பயன்படுத்தும் உணவு பொருட்களில் சித்த மருந்தாக பயன்படுத்தப்படும் தாவர வகைகள் கண்காட்சியை பார்வையிட்டு, அதன் சிறப்புகளை சித்த மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ், சித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story