கோடைமழை எதிரொலி:பூத்துக்குலுங்கும் எள் செடிகள்
கோடைமழை எதிெராலியாக கூடலூர் பகுதியில் எள் செடிகள் பூத்துக்குலுங்குகின்றன.
தேனி
கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளான கல் உடைச்சான் பாறை, பெருமாள் கோவில் புலம், சரித்திரவு, கழுதை மேடு, பளியன்குடி, புது ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இந்த விளை நிலங்களில் விவசாயிகள் நிலக்கடலை, தட்டைப்பயறு, அவரை உள்ளிட்ட பயிர்களை கடந்த பங்குனி மாதம் கடைசி வாரத்தில் சாகுபடி செய்தனர். இதில் அதிகளவு நிலப்பரப்பில் எள் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது எள் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனையடுத்து களை எடுத்தும், மருந்து தெளித்தும் பயிரை நன்கு பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர், குமுளி, தேக்கடி ஆகிய பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு எள் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story