பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்- ரேஸ்கோர்ஸ் அரங்கில் 1-ந் தேதி தொடக்கம்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கான  கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்- ரேஸ்கோர்ஸ் அரங்கில் 1-ந் தேதி தொடக்கம்
x

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ரேஸ்கோர்ஸ் அரங்கில் 1-ந் தேதி தொடங்குகிறது.

மதுரை


பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ரேஸ்கோர்ஸ் அரங்கில் 1-ந் தேதி தொடங்குகிறது.

பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்தாண்டிற்கான மாவட்ட அளவில் இருப்பிடமற்ற கோடை கால பயிற்சி முகாம் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் வருகிற மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் 1-ந் தேதி ரேஸ்கோர்ஸ் அரங்கிற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் தடகளம், கையுந்துபந்து, கூடைபந்து, கால்பந்து, ஆக்கி, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து (ஹேண்ட் பால்) ஆகிய விளையாட்டில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இது தவிர மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள பயிற்சி முகாமும் நடைபெறும்.

சான்றிதழ்

நீச்சல், மேசைப்பந்து, இறகுப்பந்து ஆகிய விளையாட்டுகளில் கட்டணத்துடன் பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டு விடுதியில் சேர உள்ள மாணவ, மாணவிகளும் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். பயிற்சி முகாம் தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும்.

இந்த பயிற்சி முகாம் முடிவில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா தெரிவித்துள்ளார்.


Next Story