கோடைகால பயிற்சி முகாம்
கோடைகால பயிற்சி முகாம் நடந்தது.
இனாம் கிராம கிராமத்தில் உள்ள கரூர் கிளை நூலகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு வாசகர் வட்ட நெறியாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். கிளை நூலகர் மோகனசுந்தரம் வரவேற்று பேசினார்.
தன்னார்வலர்கள் மகேஷ், தட்சிணாமூர்த்தி ஆகியோர் செல்போன் மற்றும் வீடியோ கேமராக்கள் மூலம் விளையாடும் விளையாட்டுகளுக்கும், நேரடியாக விளையாடக்கூடிய பாரம்பரிய விளையாட்டிற்கும் உள்ள வித்தியாசம் குறித்து விளக்கி கூறி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
முன்னதாக அன்னையர் தினத்தை முன்னிட்டு இல்லம் தேடி கல்வி மைய மாணவி.ஹன்சுஜா அம்மா பற்றிய கவிதை வாசித்தார். அவருக்கு நூல் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாடகர் ரங்கசாமி அன்னையர் தின பாடல்களை பாடி குழந்தைகளை மகிழ்வித்தார். முடிவில் நூலக போட்டித் தேர்வு மைய மாணவர் சபரீஸ்வரன் நன்றி கூறினார்.