கோடை பயிற்சி முகாம் நிறைவு விழா
காட்பாடியில் கோடை பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
காட்பாடி காந்திநகர் அறிஞர் அண்ணா மாவட்ட கிளை நூலகத்தின் வாசகர் வட்டம், காட்பாடி வட்ட ரெட்கிராஸ் ஆகியவை இணைந்து ரெட்கிராஸ் அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை நாட்களில் யோகா பயிற்சி, கதை சொல்லும் பயிற்சி, ஓவியம் வரைதல், நாட்டுப்புற கலை உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா நடந்தது. விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் வி.பழனி தலைமை தாங்கினார்.
ஆசிரியை ஜி.அஞ்சலாட்சி, காட்பாடி ரெட்கிராஸ் துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார்
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். முடிவில் நூலகர் தி.மஞ்சுளா நன்றி கூறினார்.