விழுப்புரம் மாவட்டத்தில்மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்இன்று தொடங்குகிறது


விழுப்புரம் மாவட்டத்தில்மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது.

விழுப்புரம்


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந் தேதி வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

தடகளம், கைப்பந்து, கபடி, கால்பந்து, மல்லர்கம்பம், கூடைப்பந்து, ஆக்கி ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும். இம்முகாமில் 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொள்ளலாம். காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும்.

இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை 6381799370 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்து மேற்கொள்ளலாம். அல்லது நாளை நேரடியாக விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காலை 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே இந்த கோடைகால விடுமுறையை பெருமளவில் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு தங்களுடைய விளையாட்டுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.


Next Story