கோடைகால கைப்பந்து பயிற்சி
கோடைகால கைப்பந்து பயிற்சி நடைபெற்று வருகிறது.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் காமராஜர் நகரில் உள்ள ஊர்க்காவல்படை அலுவலக மைதானத்தில் கோடை கால சிறப்பு கைப்பந்து பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு கைப்பந்து கழகம் சார்பில் வருகிற 7-ந் தேதி வரை இப்பயிற்சி நடைபெறுகிறது. இம்முகாமில் தென்மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ள விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் தேர்வு செய்யப்பட்ட 50 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் ஆனந்த்பாபு பயிற்சி வழங்கி வருகிறார். பயிற்சியின் முடிவில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் தென்மண்டலம் சார்பில் கலந்து கொள்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story