கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம்


கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம்
x

மதுரையில் கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம் நடக்கிறது.

மதுரை

மதுைர மாவட்ட கையுந்து பந்து கழகம் சார்பாக 6-ம் வகுப்பு முதல் 9-ம் வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடைக்கால கைப்பந்து இலவச பயிற்சி முகாம் வருகிற மே மாதம் 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 600 மாணவர்கள் வரை கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி முகாமானது மதுரை அண்ணாநகர், ஒய்.எம்.சி.ஏ. கிரம்மர்புரம், ஓ.சி.பி.எம்., டி.வி.எஸ். உயர்நிலைப்பள்ளி, சேதுபதி உயர்நிலைப்பள்ளி, மீனாட்சி மகளிர் கல்லூரி, யாதவர் கல்லூரி, மேலூர் தெற்கு தெரு, 66-பி மேட்டுப்பட்டி, திருநகர், கோச்சடை, கள்ளந்திரி, பேரையூர், உசிலம்பட்டி மற்றும் திருவிளான்பட்டி வல்லபா வித்யாலயா போன்ற இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் பயி்ற்சி பெற விரும்பும் மாணவ, மாணவிகள், பொருளாளர் சங்கர நாராயணன் 9894141996 மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செல்வ குமார் 7550395084 ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.


Related Tags :
Next Story