சுந்தராட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


சுந்தராட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குதிரைமொழி சுந்தராட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

குதிரைமொழி ஊராட்சிக்கு உட்பட்ட சரவணப்பெரியவன் புள்ளி புங்கம்மாள்புரத்திலுள்ள சுந்தராட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந்தேதி காலையில் மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ் தேவார திருமுறை விண்ணப்பம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நான்கு கால யாகசாலை பூஜைகள், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு யந்த்ர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று காலையில் 4- ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை 8 மணிக்கு சுந்தர விநாயகர், சுந்தராட்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வர் பகவதி, செயலர் அலுவலர் ந.காந்திமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story