சுந்தராட்சி அம்மன் கோவிலில்முளைப்பாரி ஊர்வலம்
சுந்தராட்சி அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
தூத்துக்குடி
உடன்குடி:
குதிரைமொழி அருகிலுள்ள சுந்தராட்சி அம்மன் கோவிலில் கடந்த 3-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு அன்று அம்மனுக்கு மாக்காப்பு தீபாராதனை, வில்லிசை, சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்து. நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு பால் குடம், மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, பெண்கள் பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story