திருச்செந்தூர் பிஜி ஆஸ்பத்திரியில் ஞாயிற்றுக்கிழமைஇலவச சிறப்பு மருத்துவ முகாம்


திருச்செந்தூர் பிஜி ஆஸ்பத்திரியில் ஞாயிற்றுக்கிழமைஇலவச சிறப்பு மருத்துவ முகாம்
x

திருச்செந்தூர் பிஜி ஆஸ்பத்திரியில் ஞாயிற்றுக்கிழமை இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பிஜி ஆஸ்பத்திரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இலவச நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில் நுரையீரல் நோய் சிறப்பு டாக்டர் எம்.விஸ்வநாதன் கலந்து கொண்டு ஆஸ்துமா, அலர்ஜி, மூச்சிறைப்பு, அடிக்கடி சளியில் ரத்தம் வருதல், இடைவிடாத இருமல், சைனஸ் தொந்தரவு மற்றும் நுரையீரல் நோய் தொடர்பான பரிசோதனைகளை இலவசமாக மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளார். மேலும், எக்ஸ்ரே, பிஎப்டி உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். முகாம் ஏற்பாடுகளை பிஜி ஆஸ்பத்திரி நிர்வாகம் செய்துள்ளது.


Next Story