நாசரேத்தில் ஞாயிற்றுக்கிழமை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்
நாசரேத்தில் ஞாயிற்றுக்கிழமை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏரல்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஊர்வசி அமிர்தராஜ் வெளியிட்டுள்ள அரிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு திட்டமிட்டே ராகுல் காந்தி எம்.பி. பதவியை பறித்துள்ளது. இது இந்திய ஜனநாயக படுகொலை. அவதூறு என்ற சிறிய குற்றத்திற்கு பதவி பறிப்பு என்பது திட்டமிட்ட செயலாகும். ராகுல் காந்தியையும், காங்கிரசையும் பழிவாங்கும் செயலாகும். அதானி நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி ஊழலை பற்றி நாடாளுமன்றத்தில் பேச நேரம் கேட்ட ராகுல் காந்தியை பார்த்து பயந்து, பிரதமர் மோடி சாதாரண பழைய வழக்கை தூசி தட்டி அவரை பலி வாங்கி உள்ளார்.
இந்த ஜனாயக படுகொலையை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அனைத்து இடங்களிலும் தெருமுனைப் பிரசாரம் நடத்தி வருகிறோம். நாளை (சனிக்கிழமை) பகல் 12 மணிக்கு நாசரேத்தில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட, வட்டார, நகர, கிராம நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்' என கூறியுள்ளார்.