சூரியகாந்தி விதைகளை சேதப்படுத்தும் கிளிகள்,மயில்கள்


சூரியகாந்தி விதைகளை சேதப்படுத்தும் கிளிகள்,மயில்கள்
x
திருப்பூர்


முத்தூர் பகுதியில் பூத்துக்குலுங்கும் சூரிய காந்தி பூக்களில் உள்ள விதைகைள மயில்கள், கிளிகள் சேதப்படுத்துகிறது.

சூரிய காந்தி சாகுபடி

குறைந்த நீரில் அதிக மகசூல் தரும் சூரியகாந்தி சாகுபடி ஆங்காங்கே நடைபெறுகிறது. தற்போது சூரிய காந்தி செடிகளில் பூக்கள் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த சூரியகாந்தி பூக்கள் காய்ந்து விதைகள் உருவானவுடன் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு பூக்கள் வெட்டி எடுக்கப்பட்டு, பூக்களில் இருந்து விதைகள் மேலே எடுக்கப்படும்.

ஆனால் தற்போது சூரியகாந்தி சாகுபடியில் அறுவடை நேரத்தில் கிளிகள், மயில் கூட்டங்கள் ஆகிய பறவையினங்கள் கொத்தி சூரியகாந்தி விதைகளை தின்று அழித்து விடும் அபாயம் உள்ளது. இதனால் சூரியகாந்தி விதைகளை கொத்தி அழிக்க வரும் பறவையினங்களை விரட்டி விட்டு நன்கு பாதுகாப்பது சவாலானது.

கடுமையான பாதுகாப்பிற்கு பிறகே அறுவடை செய்ய முடியும். அதன்பின்னர் விதைகளை வெள்ளகோவில், பூந்துறை, சிவகிரி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள்.

கண்ணை கவரும் அழகு

இப்பகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை அக்னி வெயில் காலத்திலும் கரும்பு, மஞ்சள், வாழை பயிர்களுடன் வறட்சியை தாங்கி நன்கு வளர்ந்து சூரியகாந்தி செடிகளில் சூரியகாந்தி பூக்கள் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்குவது காண்போர் மனதை கொள்ளை கொண்டுள்ளது


Next Story