2-வது முறையாக மூழ்கிய தரைப்பாலம்


2-வது முறையாக மூழ்கிய தரைப்பாலம்
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

2-வது முறையாக தரைப்பாலம் மூழ்கியது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அடுத்த அ.காளாப்பூர் அருகில் ஆத்தங்கரைப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள தரைப்பாலம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் வாகனங்களில் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் திண்டுக்கல் கரந்தமலை பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாகவும், சிங்கம்புணரியில் பெய்த மழை காரணமாகவும் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து தடைபட்டது.

கடந்த ஜனவரி மாதம் பெய்த கன மழையின்போதும் ஆத்தங்கரைப்பட்டி தரைப்பாலம் மூழ்கியது. தற்போது 2-வது முறையாக இந்த தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. ஒவ்வொரு முறையும் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து தடைபடுவதால் மக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story