போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு


போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:15:42+05:30)

திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருக்கோவிலூர் போலீஸ் நிலைய வளாகத்தை தூய்மையாக பராமரித்து வந்த போலீசாரை அவர் பாராட்டினார்.

தொடர்ந்து மணலூர்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பை பார்வையிட்டார். பின்னர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர். திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு கண்காணிப்பு கேமரா வைக்கவும், போலீஸ் நிலையத்துக்கு வரும் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், ராஜசேகரன், பழனிச்சாமி, செந்தில்வாசன் மற்றும் போலீசார் பலர் உடன் இருந்தனர்.


Next Story