ஆத்தூர் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு


ஆத்தூர் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் போலீஸ் நிலைய பகுதிகளான நரசன்விளை விலக்கு, ஆவரையூர், தலைவன்வடலி, ஆத்தூர், கீரனூர் விளக்கு ஆகிய பகுதிகளில் கடந்த பல மாதங்களாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலைகளில் வரும் வாகனங்களை நிறுத்தி அவர்களை விசாரணை செய்து அவர்கள் வாகனங்களுக்குரிய சான்றிதழ் சரியாக உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார்.


Next Story