காவலர் தேர்வு மையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


காவலர் தேர்வு மையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

வாணியம்பாடியில் காவலர் தேர்வு மையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் வருகிற 27-ந் தேதி காவலர் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு மையங்களாக மருத கேசரி மகளிர் ஜெயின் கல்லூரி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மற்றும் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும், குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story