ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி சட்டை நாதர் கோவில் குடமுழுக்கையொட்டி ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு குடமுழுக்கு நாள் அன்று காலை ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து மலர்கள் மற்றும் புனித நீர்நான்கு கோபுரங்கள் மற்றும் பக்தர்கள் மீது தெளிப்பதற்காக ஹெலிகாப்டர் சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு வர உள்ளது. இந்நிலையில் ஹெலிகாப்டர் சீர்காழி பகுதியில் இறங்குவதற்கு தென்பாதியில் உள்ள இமயவரம்பன் கார்டனில் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தமிழ்ச்சங்கத் தலைவர் மார்க்கோனி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story