விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும் இடங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
பேரணாம்பட்டு பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும் இடங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
பேரணாம்பட்டு
நாடு முழுவதும் வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி விநாயகர் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும். பேரணாம்பட்டு பகுதியில் ஊர்வலம் நடைபெறும் இடங்களான திரு வி.க. நகர், நெடுஞ்சாலை, பஸ் நிலையம், நான்கு கம்பம் மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பத்தலப் பல்லி அணை திட்ட பகுதி ஆகியவற்றை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பார்வையிட்டார்.
நகரிலுள்ள வழிப்பாட்டு தலங்கள் விவரம் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து பத்தலப்பல்லி போலீஸ் சோதனை சாவடிக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராக்கள் சரியாக இயங்குகிறதா என ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''பேரணாம்பட்டு - பத்தலப்பல்லி வழியாக தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வாகனங்களில் கடத்தப்படுகிறதா என தீவிரமாக போலீசார் கண்காணிக்க வேண்டும்,
10 அடி உயரத்திற்கு மேல் விநாயகர் சிலைகள் எந்தெந்த இடத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது என போலீசார் கண்காணித்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும்'' என போலீசாருக்கு உத்தரவிட்டார்.