கடலூா் மாவட்டத்தில் தங்கி உள்ள வெளிநாட்டவர் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவு


கடலூா் மாவட்டத்தில் தங்கி உள்ள வெளிநாட்டவர் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவு
x

கடலூர் மாவட்டத்தில் தங்கி உள்ள வெளிநாட்டவர் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்

இந்திய அரசின் உத்தரவுபடி, வெளிநாட்டினர் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள், அதாவது, வீடு, லாட்ஜ், ஓட்டல் மற்றும் விடுதி நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் வீடுகளில் தங்கி உள்ளவர்களின் விவரங்களை வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும்.

வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டு அடைக்கலம் கொடுத்துள்ளோர், வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டு, இங்கு தங்கக்கூடியவர்கள், வெளிநாட்டில் பிறந்து இங்கே பெற்றோருடன் தங்கி படிக்க கூடியவர்கள் பற்றிய விவரங்களை உடனடியாக இணைய தளம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

சட்ட நடவடிக்கை

இதன்படி பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை பற்றிய விவரங்களை boi.gov.in என்ற இணைய தள முகவரியில் உள்ள எஸ்- படிவத்தை பூர்த்தி செய்து தெரியப்படுத்த வேண்டும். உறவினர்களின் வீடு மற்றும் லாட்ஜ், ஓட்டல், விடுதி, கம்பெனி உரிமையாளர்கள், வெளிநாட்டினருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், வெளி நாட்டினர் வருகை பதிவை boi.gov.in இணைய தள முகவரியில் உள்ள சி-படிவத்தில் வெளிநாட்டவர் பற்றிய விவரத்தை பூர்த்தி செய்து 24 மணி நேரத்தில் தெரியப்படுத்த வேண்டும். இதை மீறுவோர் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இது தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் அயல்நாட்டினர் பிரிவை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story