பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு


பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் ராகுல் காந்தி எம்.பி. நாளை பாதயாத்திரை மேற்கொள்கிறார். அவர் தங்கும் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு நடத்தினர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் ராகுல் காந்தி எம்.பி. நாளை பாதயாத்திரை மேற்கொள்கிறார். அவர் தங்கும் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு நடத்தினர்.

ராகுல் காந்தி நாளை வருகை

இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை பயண பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். 19-வது நாளாக நேற்று கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை நடத்தினார். தொடர்ந்து நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு வருகிறார்.

பின்னர் ஆமைகுளம் என்ற இடத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார். தொடர்ந்து கோழிப்பாலம், பள்ளிப்பாடி, நந்தட்டி, செம்பாலா வழியாக கூடலூர் நகருக்குள் ராகுல் காந்தி செல்கிறார். பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதைத்தொடர்ந்து கூடலூர் தனியார் பள்ளி மைதானத்தில் கேரவன் வேனில் இரவு தங்குகிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூர் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும்படியான ஆட்கள் வந்து இருக்கிறார்களா என விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ராகுல் காந்தி பாதயாத்திைர செல்லும் சாலைகளின் இருபுறமும் உள்ள கட்டிடங்களில் நின்று கொண்டு பாதுகாப்பு பணி மேற்கொள்வது குறித்து ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து ராகுல் காந்தி இரவு தங்கும் மைதானத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். போலீஸ் சூப்பிரண்டுகள் சுவாமிநாதன், ஆஷிஷ் ராவத், ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், போலீசார் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மைதானத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.



Next Story