மின்சாரம் தாக்கி மேற்பார்வையாளர் பலி
மின்சாரம் தாக்கி மேற்பார்வையாளர் பலியானார்.
ராணிப்பேட்டை
ஆற்காடு
மின்சாரம் தாக்கி மேற்பார்வையாளர் பலியானார்.
திருப்பத்தூர் மாவட்டம் வள்ளிப்பட்டு பகுதியில் உள்ள மசால் வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 28). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த சின்னத்தக்கை கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக இந்நிலையில் நேற்று காலை கம்பெனி அருகே இருந்த மின் கம்பத்தில் ஏணியின் மூலம் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சேகர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story