அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் பலி


அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் பலி
x

தர்மபுரியில் விபத்தில் சிக்கிய அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் பலியானார்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் லில்லி எமல்டா (வயது 58). இவர் பாரதிபுரத்தில் உள்ள மண்டல போக்குவரத்து அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வந்தார். அந்த பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லில்லி எமல்டாவை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story