அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது - ஜெயக்குமார் கருத்து
அரசியலில் ஓ.பி.எஸ்-ன் எதிர்காலம் ஜீரோதான்; ஓ.பி.எஸ்., சசிகலா, டிடிவி தினகரன் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
இந்தநிலையில் இந்த தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்து கூறியதாவது:-
* சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் அதிமுக பீடுநடை போடும் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கள்
* எடப்பாடி பழனிசாமி நடத்திய தர்மயுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி
* அதிமுக தொண்டர்கள் ஈபிஎஸ் பக்கம் உள்ளனர். நியாயமான திர்ப்பு வந்துள்ளது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
* கவுரவர்களின் சூழ்ச்சி எடுபடவில்லை, பாண்டவர்களான எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. மகிழ்ச்சியான தீர்ப்பு. அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது. அரசியலில் ஓ.பி.எஸ்-ன் எதிர்காலம் ஜீரோதான்; ஓ.பி.எஸ்., சசிகலா, டிடிவி தினகரன் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை; அவர்கள் தவிர மற்றவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
* வெற்றி மீது வெற்றி வந்து அண்ணன் எடப்பாடியாரைச் சேரும் - அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேச்சு
* சுப்ரீம் கோர்ட்டின் தெய்வ வாக்கு. அம்மாவை வேண்டி நின்ற எங்களுக்கு இந்த தீர்ப்பு உற்சாகத்தை அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களும் தீர்ப்பு அளிப்பார்கள், எடப்பாடியாரை மீண்டும் முதல்வராகக் கொண்டு வருவோம். எடப்பாடியார் தலைமையில் உழைப்போம், எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்துவோம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.
* அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிமுகவினருக்கு உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் அளித்துள்ளது. அவர்களின் பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துகிறேன் - தமாகா தலைவர் ஜி.கேவாசன் வாழ்த்து