சுரண்டை அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்


சுரண்டை அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம் நடத்தினர்.

தென்காசி

சுரண்டை:

தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் வாயில் முழக்கப் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் நலச்சங்க சுரண்டை கிளை தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். கவுரவ விரிவுரையாளர்கள் சித்திரைகனி, இளங்கோவன், அண்ணாமலை, ஹேமாகல்யாணி, சந்தணதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹரிஹரசுதன் வரவேற்றார்.

தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கும் அரசாணை எண் 56-ன் கீழ் பணி வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயம் செய்த ஊதியம் வழங்க வேண்டும், மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க போராட்டம் நடந்தது. இதில் கவுரவ விரிவுரையாளர்கள் பிரியங்கா, கார்த்திகா, அருள்மேரி, ராமவாணி, ஜெகானந்தஜோதி, முத்தரசி, ஜெனிஷா, சுபசங்கரி, கீர்த்தனாதேவி, டெனிஸ்டெய்சி, கார்த்திக்குமாரவேல், சிவாஜி செல்லையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story