கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோவிலில் சூரசம்ஹார விழா


கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோவிலில் சூரசம்ஹார விழா
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. நேற்று சூரசம்கார நிகழ்ச்சி நடந்தது. மாலை மாலை 4.15 மணிக்கு சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், வீரபாகு சப்பரத்திலும் வீதி உலா வந்தனர். மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி தொடங்கியது.

சுப்பிரமணிய சுவாமி தாரகா சூரனையும், சிங்கமுக சூரனையும், சூரபத்மனையும், அஜமுகியையும் அடுத்தடுத்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலை பிரியா, கோவில் ஊழியர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story