தூத்துக்குடியில் 25 அம்மன் கோவில்களில் சூரசம்காரம்


தூத்துக்குடியில் 25 அம்மன் கோவில்களில் சூரசம்காரம்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 25 அம்மன் கோவில்களில் சூரசம்காரம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்பட 25 அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடந்து.

நவராத்திரி விழா

தூத்துக்குடியில் நவராத்திரி விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று மாலையில் நடந்தது. தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் வளாகத்திற்குள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நரகாசுரனின் 7 தலைகள் சூரசம்ஹாரம் செய்யப்பட்டது. இதில் சூரன் தலை, கஜமுகன் தலை, சிங்கம் தலை, மான் தலை, ரிஷி முகம் தலை, நரகாசுரன் தலை இறுதியாக மகிஷாசூரன் தலை வெட்டப்பட்டு அம்மனின் பாதத்தில் வைக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

பத்திரகாளியம்மன் கோவில்

தூத்துக்குடி மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் ஏறி கஜமுகாசூரன், மகிஷாசூரன் உள்ளிட்ட சூரன்களை அம்மன் வதம் செய்தார்.

அதுபோல் வடபாகம் சந்தணமாரியம்மன் கோவில் நவரத்திரி கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சூரசம்ஹரா நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியமன் கோவில்களில் நவராத்திரி மற்றும் தசராவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி முளைப்பாரி ஊர்வலம், மாவிளக்கு பூஜை ஆகியன நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இது போல் மாநகரில் பல்வேறு பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பாற்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story