தேசிய சராசரியை விஞ்சிய தமிழகத்தின் வளர்ச்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
நமது அயராத முயற்சிகள் மூலம் இந்தியப் பொருளாதாரத்தின் ஆற்றல்மிகு மையமாகத் தமிழ்நாட்டை நிலைநிறுத்தியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
பெரும் பெருமிதத்துடன் தேசிய சராசரியை விஞ்சிய வளர்ச்சி! நமது திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்கிறது. நமது அயராத முயற்சிகள் 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில் 8% எனும் சிறப்பான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உறுதிசெய்து, இந்தியப் பொருளாதாரத்தின் ஆற்றல்மிகு மையமாகத் தமிழ்நாட்டை நிலைநிறுத்தியுள்ளன.
நடப்பு விலையில் 2022-23 ஆண்டுக்கான நமது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ( GSDP) 14,53,321 கோடி ரூபாயாக உயர்ந்து, 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்னும் நமது இலக்கை நோக்கிய பயணத்துக்கு அடித்தளம் அமைத்துள்ளது.
Related Tags :
Next Story