குற்ற செயல்களை கண்டுபிடிக்க 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
கந்திலி பகுதியில் குற்ற செயல்களை கண்டுபிடிக்க 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
கந்திலி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடமான கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரி, கெஜல்நாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி., ஆம்பள்ளி ரோடு, .தோக்கியம் கூட்ரோடு, .கந்திலி சந்தை போன்ற முக்கிய இடங்களில் குற்றங்களை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியுடன் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியதாவது; திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் விபத்துக்களை குறைக்கவும் மூன்றாவது கண்ணாக கருதப்படும் கண்காணிப்பு கேமரா பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. கந்திலி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 10 இடங்களில் தற்போது கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் நேரடியாக கந்திலி போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.
இதன் மூலம் மாவட்டம் முழுவதும் குற்ற செயல் மற்றும் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.