கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஒத்துழைக்க வேண்டும்


கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஒத்துழைக்க வேண்டும்
x

குற்றச்சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஒத்துழைக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் பேசினார்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் பாகாயம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மாநகராட்சி 11 வார்டுகளில் உள்ள 11 கவுன்சிலர்கள் மற்றும் 5 கிராம ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் பாகாயம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.

இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசுகையில், வேலூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் மாநகராட்சி, வணிகர்சங்கம், காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதனால் குற்றங்கள் குறைந்துள்ளன. அதேபோன்று ஒவ்வொரு வார்டுகளின் முக்கிய பகுதிகள், தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இதற்கு குறிப்பிட்ட நிதியை உள்ளாட்சி பிரதிநிதிகள் திரட்டி வழங்கினால், அதனை விட 2 மடங்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

இதன்மூலம் அங்கு செயின்பறிப்பு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கவும், மேலும் அதில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியும்.

இதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் சாராயம், கஞ்சா, கள்ளச்சந்தையில் மது விற்றால் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பேரில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story