கலெக்டர் முரளிதரன் ஆய்வு


கலெக்டர் முரளிதரன் ஆய்வு
x

பென்னிகுயிக் மணிமண்டபத்தில் நடந்த பராமரிப்பு பணியை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

தேனி

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கை நினைவு கூறும் வகையில், தமிழக அரசு சார்பில் லோயர்கேம்பில் அவருடைய முழு உருவ வெண்கல சிலையுடன் நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பென்னிகுயிக் நினைவை போற்றும் வகையில், அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பரளி நகரின் மைய பூங்காவில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 10-ந் தேதி அந்த சிலை திறக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையிலான குழுவினர் லண்டன் சென்றுள்ளனர்.

இதையொட்டி லோயர்கேம்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டப பூங்காவில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணியை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதேபோல் கூடலூர் அருகே ஆங்கூர்பாளையம் பகுதியில், பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணி மற்றும் சாமாண்டிபுரம் கிராமத்தில் நடந்த குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். மேலும் சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெறுகிற கிராம ஊராட்சி ஒன்றிய பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இதேபோல் கூடலூர் அருகே ஆங்கூர்பாளையம் பகுதியில், பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணி மற்றும் சாமாண்டிபுரம் கிராமத்தில் நடந்த குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். மேலும் சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெறுகிற கிராம ஊராட்சி ஒன்றிய பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.


Next Story