அரசு பள்ளிகளில் ஆய்வு
அரசு பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் மற்றும் ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப்பள்ளிகளின் செயல்பாடுகள், நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தும் விதம் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், ஒவ்வொரு மாணவ-மாணவியும் வாழ்க்கையில் முன்னேற நான் முதல்வன் திட்டம் மூலம் விளக்கப்படும். உங்களின் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க சத்துணவு, சிறப்பாக கல்வி கற்க தரமான பாட புத்தகங்கள், அரசின் இதர இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. உங்கள் கல்வி வளர்ச்சிக்கு தகுதியான ஆசிரியர்கள் வழிகாட்டுகின்றனர். இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் சிறந்தவர்களாக, சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக உருவாக வேண்டும், என்று தெரிவித்தார்.
பின்னர் பள்ளிகளின் சத்துணவு கூடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்படும் சத்துணவின் தரம் குறித்தும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாதுரை மற்றும் தலைமை ஆசிரியர்கள் உடனிருந்தனர்.