கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு
x

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

கரூர்

கரூர் மாவட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குளித்தலை ஊராட்சி ஒன்றியம் இனுங்கூர் ஊராட்சி காகம்பட்டியில் கலெக்டர் பிரபுசங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் 80 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நிலப்பகுதியில் மண் ஆய்வு, நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும். நீர்வள ஆதாரம் இருப்பின் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்சார வசதி அல்லது சூரியசக்தி பம்பு செட் மூலம் நீர் வசதி செய்து நீர் பங்கீடு முறைப்படி உகந்த பயிர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம் 8 ஊராட்சிகளில் 80 தரிசு நில தொகுப்புகள் கண்டறிந்து அதன் 1,509 ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மேம்பட உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:- காகம்பட்டி குக்கிராமத்தில் 25 விவசாய பயனாளிகள் உள்ளனர். இந்த தொகுப்பின் பரப்பு 15 ஏக்கர் ஆகும். தேர்வு செய்யப்பட்ட தொகுப்பில் 15 வருடம் சாகுபடி செய்யாமல் புதராக கிடந்த நிலத்தின் புதரினை அகற்றி நிலத்தினை சமன்படுத்தி உழவு மேற்கொண்டு உளுந்து விதைக்கப்பட்டது. மேலும், தற்போது 10 ஏக்கரில் முருங்கையும், 2.5 ஏக்கரில் கொய்யாவும், 2.5 ஏக்கரில் நெல்லியும் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, வேளாண்மை பொறியியல் துறை மூலம் குழுவில் உள்ள உறுப்பினரின் வயலில் பொதுவான ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பண்ணைக் குட்டையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுப்பில் உள்ள மக்கள் பயன்பெற கிராம சாலைகள், உலர்களம், பொது ஆட்டுக் கொட்டகை, மாட்டுக் கொட்டகை அமைத்திடவும், தோட்டக்கலைத் துறை மூலம் முருங்கை, நெல்லி, கொய்யா ஆகியவற்றினை நடவு செய்யவும், கால்நடை துறை மூலம் 60 ஆடுகள், 22 கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. என்றார்.


Next Story