போகலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு
போகலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு
சத்திரக்குடி
பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஊராட்சி ஒன்றியம் எட்டிவயல் ஊராட்சியில் வேளாண்மை விற்பனை குழுவின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த மிளகாய் வத்தல் வணிக வளாகத்தை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு 2 ஆயிரத்து 369 மிளகாய் மூடைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. நல்ல விலை கிடைக்காதபட்சத்தில் அந்த கிட்டங்கியில் வாடகை அடிப்படையில் இருப்பு வைத்து கூடுதல் விலை கிடைக்கும்ேபாது விற்பனை செய்ய விவசாயிகளை வலியுறுத்தினார். பின்பு எட்டிவயல் ஊராட்சி அனுசியாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.19.92 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார். எட்டிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து அங்கு படிக்கும் மாணவர்களின் புத்தக வாசிப்பு திறனை அறிய மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்பு அப்பகுதி நடைபெறும் சாலை பணிகளையும் ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து போகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கர்ப்பிணிகள், நோயாளிகளிடமும் குறைகளை கேட்டு அறிந்தார். அது சமயம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பரமக்குடி தாசில்தார் ரவி, ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் ராஜா, எட்டிவயல் ஊராட்சி மன்ற தலைவர் கனகசக்தி பாஸ்கரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.