பூம்புகாரில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் ஆய்வு
பூம்புகாரில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்தார்.
பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர், கழிவறை, படகு நிறுத்துமிடம், ஓய்வு அறை உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதை சட்டசபை உறுதி மொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் மோகன், ராமலிங்கம், ஜெயக்குமார், சக்கரபாணி, அண்ணாதுரை, உறுதிமொழி குழு செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் ஆகியோர் குழுவினருக்கு விளக்கி கூறினர். இதையடுத்து பூம்புகார் அரசு கல்லூரியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 24 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், ரூ.3 கோடியில் பூம்புகார் தீயணைப்பு நிலையம் கட்டும் பணி, ரூ.3 கோடியில் திருவெண்காடு அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகள் ஆகியவற்றையும் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது நிவேதா முருகன் எம்.எல்.ஏ., சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ரவி, சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.