ரெயில்வே மேம்பாலம் கட்ட நில அளவீடு பணி
பழனியில், ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான நில அளவீடு பணி நடந்தது.
திண்டுக்கல்
பழனி சத்யாநகர் பகுதியில், புதுதாராபுரம் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. பொள்ளாச்சி, திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு ரெயில்கள் வரும்போது இந்த ரெயில்வேகேட் மூடப்படும். அப்போது சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதோடு, நெரிசலும் ஏற்பட்டு வந்தது. எனவே அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு புதுதாராபுரம் சாலையில், சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் மற்றும் அதன் அருகில் சர்வீஸ் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நெடுஞ்சாலைத்துறை சார்பில், எந்திரம் மூலம் நில அளவீடு பணி நேற்று நடந்தது.
Related Tags :
Next Story