தூக்குப்போட்டு பெண் தற்கொலை
உடுமலையை அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் மனோபிரியா (வயது 26) ராஜசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 6½ ஆண்டுகளாகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையின்மைக்கு தீர்வு காணும் வகையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் மனோபிரியா அதிக நேரம் செல்போனில் செலவழித்து வந்துள்ளார். இதனை அவருடைய கணவர் ராஜசேகர் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனோபிரியா கோபித்துக்கொண்டு சில நாட்களுக்கு முன் வளர்ப்புத்தந்தையான சிவக்குமாரின் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று சிவக்குமார் வேலைக்கு சென்று விட்ட நிலையில் பாட்டி சரஸ்வதி மதியம் வீட்டுக்கு வந்துள்ளார். வீடு முழுவதும் தேடியும் மனோபிரியாவை காணாத நிலையில் சமையலறையில் தூக்கு மாட்டிய தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.