ரேஷன் பொருட்களை பதுக்கிய 3 விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம்

ரேஷன் பொருட்களை பதுக்கிய 3 விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம்
x

ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்காமல் வியாபாரிகளுக்கு விற்பனை செய்த 3 விற்பனையாளர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

மதுரை

திருமங்கலம்,

ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்காமல் வியாபாரிகளுக்கு விற்பனை செய்த 3 விற்பனையாளர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வு

ரேஷன் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யாமல் வியாபாரிகளுக்கு வினியோகம் செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர் உத்தரவின்பேரில் திருமங்கலம் ஆர்.டி.ஓ. அனிதா, வட்ட வழங்கல் அலுவலர் வீரமுருகன் ஆகியோர் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர்.

இதில் திருமங்கலம் மின்வாரிய ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலை, செக்கானூரணி அருகே உள்ள புளியங்குளம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையாளர்கள் முறைகேடு செய்தது தெரியவந்தது.

எச்சரிக்கை

இதையடுத்து 3 கடைகளில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ரேஷன் கடை பணியாளர்கள் அரசு வழங்கக்கூடிய பொருட்களை பதுக்கி வைக்கக்கூடாது. பொருட்கள் கேட்டு வரும் மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இதுபோன்ற அத்துமீறி செயல்பாடுகள் பற்றி புகார் அளிக்க பொதுமக்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Next Story