பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியிடை நீக்கம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்தம் முகாமில் பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்தம் முகாமில் பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
சிறப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த சிறப்பு முகாம் 1038 இடங்களில் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அமர்குஷ்வாஹா பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வாக்குச்சாவடி நிலையத்தில் பணியில் இல்லாத வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்ய திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.
13 பேர் பணியிடை நீக்கம்
அதன்படி திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பணிக்கு வராத 13 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
1.கலைவாணி, வாணியம்பாடி நகராட்சி. 2. சுவாதிலட்சுமி, ஆம்பூர். 3.கவிதா, ஆம்பூர், 4 பத்மாவதி, ஆம்பூர். 5. வசந்தி, கிராம உதவியாளர், மாதனூர் கிராமம், 6.எஸ்.கீதா, அங்கன்வாடி பணியாளர், புள்ளானேரி, ஜோலார்பேட்டை. 7. தீபா, அங்கன்வாடி பணியாளர் பூரிகமாணிமிட்டா (நிரந்தர நீக்கம்).
8.விமலா, அங்கன்வாடி பணியாளர், ஏலகிரி, 9. ராணி, அங்கன்வாடி பணியாளர், குனிச்சி மோட்டூர். 10.சேவியர் புஷ்பராஜ், சத்துணவு அமைப்பாளர், திருப்பத்தூர், (நிரந்தர நீக்கம்). 11. ஆரோக்கியதாஸ் - சத்துணவு அமைப்பாளர், திருப்பத்தூர் (நிரந்தர நீக்கம்).
12.சிவானந்தம், சத்துணவு அமைப்பாளர், 13. வசந்தி -சத்துணவு அமைப்பாளர்.
கடும் நடவடிக்கை
இனிதொடர்ந்து நடைபெற உள்ள சிறப்புகருக்க நாட்களில் பணிபுரியாத வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மற்றும் வாக்குசாவடி மைய அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.