செல்போன் உரையாடலின்போது மாணவனிடம் அவனது சமூகத்தை விசாரித்த பேராசிரியை இடைநீக்கம்
செல்போன் உரையாடலின்போது மாணவனிடம் அவனது சமூகத்தை விசாரித்த பேராசிரியை இடைநீக்கம் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை.
சென்னை,
சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியை, மாணவர் ஒருவரிடம் செல்போனில் உரையாடும்போது, அந்த மாணவரிடம் எந்த சமூகத்தைச் (கம்யூனிட்டி) சேர்ந்தவன் என்று கேட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது.
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட பேராசிரியையிடம் விசாரணை நடத்தியது. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோருக்கும் தொடர்பு கொண்டும் அதேபோல் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் அந்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
அந்த உத்தரவில், 'தமிழ்த் துறை பேராசிரியை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதும், அவர் தவறிழைத்து இருப்பதும் தெரியவந்ததன் அடிப்படையில் அவர் 2 மாத காலத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். 2 மாத காலத்துக்கு பின் பேராசிரியை தரக்கூடிய விளக்கத்தை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.