ராகுல்காந்தி மீதான தண்டனை நிறுத்தி வைப்பு:காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


ராகுல்காந்தி மீதான தண்டனை நிறுத்தி வைப்பு:காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடி

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.க்கு அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதனால் அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். அதனை விசாரித்த நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதனால் மீண்டும் ராகுல்காந்தி எம்.பி.யாக நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளீதரன் தலைமையில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story