ெரயில்வே பீடர் சாலை சீரமைக்கும் பணி முடக்கம்


ெரயில்வே பீடர் சாலை சீரமைக்கும் பணி முடக்கம்
x

விருதுநகரில் ரெயில்வே பீடர் சாலை சீரமைக்கும் பணி முடக்கம் அடைந்துள்ளது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகரில் ரெயில்வே பீடர் சாலை சீரமைக்கும் பணி முடக்கம் அடைந்துள்ளது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலை சீரமைப்பு

வாகன விபத்துக்களை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சாலைகளும் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் தரமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை சீரமைப்பு பணிகளுக்கு நிதி உதவி செய்துள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாலை சீரமைப்பு பணிக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

பாராமுகம்

இந்தநிலையில் விருதுநகர் நகராட்சி பகுதியில் பிரதான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று நகரசபை கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் வலியுறுத்திய போதிலும் நகராட்சி நிர்வாகம் பாராமுகமாகவே உள்ளது. அதிலும் விருதுநகர் ெரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையான ெரயில்வே பீடர் ரோடு சேதமடைந்திருந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்தது.

ஆனால் சேதமடைந்த பகுதிகளை எந்திரம் மூலம் தோண்டிவிட்டு அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ெரயில் நிலையத்துக்கு செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டியும் நகராட்சி நிர்வாகம் பாராமுகமாக உள்ளது.

நடவடிக்கை

எனவே வாகன விபத்துக்களை தடுக்க முனைப்புடன் நடவடிக்கை எடுத்துவரும் மாவட்ட நிர்வாகம் விருதுநகர் ெரயில் நிலையத்திற்கான பிரதான சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசனும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி கூறி உடனடியாக ெரயில்வே பீடர் சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.


Related Tags :
Next Story