திண்டிவனத்தில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்


திண்டிவனத்தில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம்


திண்டிவனம் அருகே விட்டலாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சகலகலாதரன் (வயது 59) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய், கொடுத்த புகாரின்பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகலகலாதரனை கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சிவசுப்பிரமணியன், அப்பள்ளிக்கு நேரில் சென்று நடந்த சம்பவம் குறித்து மாணவியின் தோழிகள் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அம்மாணவியிடம் சகலகலாதரன் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பான விசாரணை அறிக்கையை அவர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு சமர்ப்பித்தார்.

இதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சகலகலாதரனை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.


Next Story