Normal
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
அமாவாசையையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது
மயிலாடுதுறை
திருவெண்காடு:
திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமானின் 3 கண்களில் இருந்து மூன்று பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களால் மூன்று குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. 3 குளங்களில் நீராடி சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிறப்பு பெற்ற இந்த கோவிலில் அமாவாசையையொட்டி 3 குளங்களில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி அஸ்திர தேவருக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தீர்த்தவாரி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், மேலாளர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story