நத்தத்தில் வேட்டைக்காரன் சுவாமி வீதிஉலா


நத்தத்தில் வேட்டைக்காரன் சுவாமி வீதிஉலா
x
தினத்தந்தி 10 April 2023 2:00 AM IST (Updated: 10 April 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் வேட்டைக்காரன் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

திண்டுக்கல்

நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தில் வேட்டைகாரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. அப்போது மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் வேட்டைகாரன் சுவாமி மற்றும் குதிரை, பரிவார தெய்வங்கள் நத்தம் புறநகர் பகுதியில் எழுந்தருளினர். அப்போது சுவாமிகளுக்கு கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிகள், நத்தம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர் வர்ணக்குடைகள், பரிவாரங்களுடன் வேட்டைக்காரன்சுவாமி ஊர்வலமாக சேர்வீடு கிராமத்திற்கு சென்றடைந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில், நத்தம், சேர்வீடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சேர்வீடு கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story